கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட ரயில் விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அழுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இத்தாலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை ஏற்பட்டதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸ சேரம் பிரதேசத்தில் அமைந்துள்ள ரன்வெலி ஹோட்லுக்கு அருகில் உள்ள ரயில் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த இத்தாலி பிரஜை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment