ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி, அதே போட்டியில் வசூலையும் குவித்தன.
மூன்றாவது வாரத்தைக் கடந்தும் இந்த இரண்டு படங்களும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
படம் வெளியான ஒரு வாரத்திலேயே இரண்டு படங்களில் எந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்தது என்ற பரபரப்பு எழுந்தது.
'பேட்ட' தயாரிப்பாளர் தரப்பில் 11வது நாளில்தான் 100 கோடி வசூலை அவர்களது படம் தொடும் என்றார்கள். ஆனால், அதற்குப் பதிலடியாக 'விஸ்வாசம்' வினியோகஸ்தர் 8 ஆவது நாளிலேயே 125 கோடியை அவர்களது படம் கடந்ததாக அறிவித்தார்கள்.
இப்போது 'விஸ்வாசம்' படம் 150 கோடியைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. 8 நாளில் 125 கோடியைக் கடந்ததாக அறிவித்தவர்கள், மேற்கொண்டு 11 நாளில் கூடுதலாக 25 கோடி வசூலித்ததா அல்லது அதற்கு மேலும் வசூலித்ததா என்று இன்னும் அறிவிக்கவில்லை.
'பேட்ட' படம் 11வது நாளில் 100 கோடியைக் கடக்கும் என்று சொன்னவர்களும் படம் 100 கோடியைக் கடந்ததா அல்லது அதற்கு மேலும் கடந்ததா என்று இதுவரை சொல்லவில்லை.
0 comments:
Post a Comment