கொழும்பு நகரப்பகுதியிலுள்ள யாசகர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் வசிக்கும் மக்கள் அன்றாட பல்வேறு பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றனரெனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் அவர்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை கொழும்பு நகரை மேலும் சிறந்த முறையில் அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் முதலில் அங்குள்ள யாசகர்களை வெளியேற்ற வேண்டுமெனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment