இலங்கைக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் யஸ்மின் சூக்கா!
இறுதிக்கட்ட யுத்தத்தில் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம் பெற்றதாக குறிப்பிட்டுக் கொண்டு இன்றும் ஒரு சில தரப்பினர் கடந்த அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர். என பொதுஜன பெரமுன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீறிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன முன்னணி; அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் யுத்தத்திற்கு தலைமை தாங்கியவர்களையும், 54 இராணுவ வீரர்களையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலைப்படுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பேன் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்ட நிர்வாக பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளமையானது எதிர்காலத்தில் பாரிய நெருக்கடியினை இலங்கைக்கு ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment