நடிகர் விஜய்யின் 63 ஆவது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 21 அன்று தொடங்குகிறது. சர்கார் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தை அட்லீ இயக்குகிறார்.
அட்லியுடன் 3 ஆவது முறையாக விஜய் இணைந்து கூட்டணி அமைத்திருக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கபட்டு நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் பாடல் எழுதுகிறார்.
மெர்சல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே.விஷ்ணு இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக இருக்கும் இந்தப் படம் 2019-ம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் அதாவது ஜனவரி 21 அன்று துவங்க உள்ளது. இதற்காக பின்னி மில்லில் செட் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் யோகிபாபு காமெடியனாக நடிக்கிறார்.
மற்றொரு காமெடி கதாபாத்திரத்தில் விவேக் நடிக்கிறார். நேருக்கு நேர், குஷி, பிரியமானவளே, பத்ரி, உள்ளிட்ட 11 படங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள விவேக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப்படத்தில் நடிக்கிறார்.
0 comments:
Post a Comment