மக்கள்தொகையைப் பெருக்கும் முயற்சியாக, 5வது குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ. 2 லட்சம் நிதியுதவி செய்யப்படும் என ஜப்பான் நகரம் ஒன்றில் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிற்கு பெரும் பூதாகரமாக உள்ள பிரச்சினைகளில் ஒன்று மக்கள்தொகைப் பெருக்கம். ஆனால் இதற்கு நேர்எதிராக மக்கள்தொகை குறைந்து வருவதால் பெரும் கவலையில் இருக்கிறது ஜப்பான்.
உலகில் உள்ள நாடுகளில் கடந்த 1970களில் இருந்த மக்கள் தொகையைவிட அதிகம் குறைந்து வருகிறது ஜப்பானில். கடந்த 2017ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் பிறந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சம் தான்.
ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டுகிறது. ஜப்பான் நாட்டின் சுகாதரம் மற்றும் தொழிலாளர் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது. குழந்தைகள் சதவீதம்: ஜப்பான் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில், குழந்தைகளின் சதவீதம் என்பது 12.3 மட்டும் தான். ஆனால் அதுவே இந்தியாவில் 31 சதவீதமும், அமெரிக்காவில் 19 சதவீதமும், சீனாவில் 17 சதவீதமும் ஆகும். தற்போது ஜப்பானின் மக்கள் தொகை 12.7 கோடியாகும். இது வரும் 2065ம் ஆண்டில் சுமார் 9 கோடியாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment