ஜேர்மனியில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் நுழைந்த மர்ம நபர் 43 சிறார்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு ஜேர்மனியின் மன்ஸ்டர் நகரில் குறித்த சிறைபிடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
திங்களன்று மாலை வேளையில் மன்ஸ்டர் நகரில் அமைந்துள்ள அந்த உடற்பயிற்சிக் கூடத்தில் நுழைந்த அந்த நபர் துப்பாக்கியை காட்டி 43 சிறுவர்கள் மற்றும் 23 வயது மதிக்கத்தக்க இரண்டு இளம்பெண்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், ஒருமணி நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த நபரை கைது செய்துள்ளனர். முன்னதாக தம்மிடம் வெடிகுண்டு இருப்பதாகவும், பொலிசார் நெருங்கினால் அதை வெடிக்கச் செய்வேன் எனவும் மிரட்டியுள்ளார் அந்த நபர்.
ஆனால் குறித்த நபரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பொலிசார், அவரிடம் இருக்கும் துப்பாக்கி போலியானது என கண்டறிந்த பின்னர், மின்னல் வேகத்தில் செயல்பட்டு அந்த நபரை கைது செய்துள்ளனர்.பின்னர் சிறார்களையும், இரு இளம்பெண்களையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இதனிடையே பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த மன நபர் மன நலம் பாதிக்கப்பட்டவர் எனவும், சிகிச்சை பெற்றுவருபவர் எனவும் கண்டறிந்துள்ளனர்.
இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் உள்ளிட்ட எவருக்கும் இந்த விவகாரத்தில் எந்த ஆபத்தும் நேரவில்லை என பொலிசார் பின்னர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment