சவுந்தர்யாவுக்கு மறுமணம்!

நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா, 'கோச்சடையான்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன் சந்திரமுகி, சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றினார்.

சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அஸ்வின் - சவுந்தர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். பின்னர் அதிகாரபூர்வமாக விவகாரத்தும் பெற்றனர்.

அதனை தொடர்ந்து சவுந்தர்யா, தனுஷ் நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தை இயக்கினார். சில மாதங்களுக்கு முன்பாக சவுந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாகவும், விசாகன் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் ஆவார். இவர் அமெரிக்காவில் படித்தவர். 'வஞ்சகர் உலகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும், பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவரும் திருமணமாகி விவாகரத்தானவர்.

தற்போது சவுந்தர்யா விசாகன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டது. 'சவுந்தர்யா, விசாகன் திருமணம் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி நடைபெற உள்ளது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி பிப்ரவரி 9-ந் தேதி முதல் மெகந்தி, வரவேற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது




Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment