கேரளாவில் 4 வயதில் மனைவியாக நாடகத்தில் நடித்த சிறுமியை இளைஞர் ஒருவர் 22 ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளத்தில் கொண்டாடப்படுகிறது.
கேரள மாநிலம் கொச்சி நகரில் இந்த அபூர்வ திருமணம் அரங்கேறியுள்ளது.
கொச்சி நகரத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களாக பணியாற்றிய இருவர் ஒரே மாதத்தில் பிள்ளை பெற்றுள்ளனர்.
நண்பர்களான இருவரும் தங்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு ஸ்ரீராம் எனவும் ஆர்யஸ்ரீ எனவும் பெயரும் சூட்டியுள்ளனர்.
இந்த நிலையில் 4 வயதில் இருவரையும் ஒரு ராணுவ வீரரின் திருமணம் என்ற நாடகம் ஒன்றில் கணவன் மனைவியாக நடிக்க வைத்துள்ளார் ஆசிரியர் ஒருவர்.
இதனிடையே பல ஆண்டுகள் கடந்த நிலையில் ஸ்ரீராம் உரிய தேர்வு எழுதி ராணுவ அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
ஆர்யஸ்ரீ மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பேஸ்புக் பக்கத்தில் தங்களின் பழைய புகைப்படத்தை தேடியெடுத்த ஸ்ரீராம், ஆர்யஸ்ரீயை தொடர்பு கொண்டு ஏன் நாம் மீண்டும் திருமணம் செய்துகொள்ள கூடாது என வினவியுள்ளார்.
இந்த விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவரவே இரு குடும்பத்தாரும் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
இளைஞர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உறுதியுடன் இருப்பதை அறிந்த பின்னர் அவர்கள் திருமணத்திற்கு குடும்பத்தாரும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த திருமண விவகாரம் சமூக வலைதளத்தில் வெளியாகவே பலபேர் தங்கள் வாழ்த்துகளை அவர்களுக்கு பதிவு செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment