21, 27ந்தேதிகளில் பிரதமர் மோடி- அமித்ஷா தமிழகம் வருகை!


பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் முறையே 21,27-ந்தேதிகளில் தமிழகம் வருவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

பா.ஜனதா தலைவர் அமித்ஷா தமிழகம் வருவது இரண்டு முறை ரத்தானது. தற்போது அவர் தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தல் பணியை பூத் அளவில் வலுப்படுத்தி வருகிறோம். 5 பூத் கொண்ட குழு சக்தி கேந்திரமாகவும், 25 பூத்களை இணைத்து மகாசக்தி கேந்திரமாகவும் உருவாக்கி பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

சக்திகேந்திரம் மற்றும் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்து பேசுவதற்காக அகில இந்திய தலைவர் அமித்ஷா வருகிற 21-ந்தேதி ஈரோடு வருகிறார்.

ஈரோடு சுற்றுப்புற மாவட்டங்களை சேர்த்து எவ்வளவு கேந்திர பொறுப்பாளர்களை வரவழைப்பது என்று ஆலோசித்து வருகிறோம். 

இதேபோல் தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களிலாவது ஆலோசனை கூட்டம் நடைபெறும். அந்த கூட்டங்களுக்கும் அமித்ஷா வருவார்.

பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி மதுரை வருகிறார். அங்கு நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.





Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment