2019ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு!
2019ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டத்திற்கான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி நடைபெறும் என நிதிமற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்பட உள்ளதோடு அதற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான ஒப்புதலை பெற்றுக்கொள்ளவதற்காக அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.
மேலும் வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மார்ச் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் அதேவேளை மூன்றாவது வாசிப்பு மார்ச் மாதம் 13ஆம் திகதி இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை செயற்திறனுக்கு அமைய முன்வைக்கும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment