2016-ம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ரூ.2,000 நோட்டுகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்த நோட்டுகளை அச்சடிக்கும் எண்ணிக்கையை ரிசர்வ் வங்கி தற்போது குறைத்துள்ளதாக தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ரூ.500,1000 நோட்டுகளைத் தடை செய்த பிறகு கடும் பணப்பற்றாக்குறை ஏற்பட ரூ.2000 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன.
இந்நிலையில் நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் அவ்வப்போது புழக்கத்தில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ முடிவெடுக்கும் என்றார்.
'ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.2,000 நோட்டுகளைக் குறைந்த அளவில் வைத்திருக்கவே முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிதல்ல' என்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment