எழில் இயக்கத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில், விஜய், சிம்ரன் மற்றும் பலர் நடித்து 20 வருடங்களுக்கு முன்பு இதே தினத்தில் வெளிவந்த படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. 175 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
விஜய் நடித்து வெளிவந்த காதல் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்திற்குப் பிறகு இந்தப் படத்திற்கும் தனி இடமுண்டு.
படத்தில் எஸ்.ஏ.ராஜ்மார் இசையில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டான பாடல்கள்.
“மேகமாய் வந்து போகிறேன்..., இன்னிசை பாடி வரும்..., இருபது கோடி நிலவுகள்..., தொட தொடு எனவே...” ஆகிய பாடல்களை அப்போது அடிக்கடி ஒளிபரப்பாத டிவி சேனல்களே இல்லை.
தெலுங்கில் நாகார்ஜுனா நடிக்க 'நுவ்வு ஒஸ்தாவனி' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது. கன்னடம், பெங்காலி, ஒரியா, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment