பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் பாஜக நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'சமத்துவத்திற்கான இளைஞர்' என்னும் அமைப்பு தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத் திருத்த மசோதாவானது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிராக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவானது விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment