இராணுவம் பயன்படுத்திய அரச மற்றும் வனவளத் திணைக்கள காணிகள் எதிர்வரும் 19ஆம் திகதி உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேச செயலக ஜயம்பதி கிராம சேவகர் பிரிவின் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான சுமார் 479 ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உடையார்கட்டுக்குளம் கிராம சேவகர் பிரிவின் வனப்பதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான சுமார் 120 ஏக்கர் காணிகளும் அதில் அடங்கியுள்ளன.
அத்தோடு மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலக வெள்ளங்குளம் கிராம சேவகர் பிரிவின் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான சுமார் 500 ஏக்கர் காணிகளும் விடுவிக்க ப்படவுள்ளன. அதற்கமைய இக்காணிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட செயலாளர்களுக்கு காணிகள் தொடர்பான ஆவணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கப்படவுள்ளன.
0 comments:
Post a Comment