நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை மூலம் ரூ. 100 கோடி வரி ஏய்ப்பு: சோனியா ராகுலுக்கு நோட்டீஸ்!

புது தில்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குதாரர்களாக இருந்த வகையில் சோனியாவும், ராகுலும் சுமார் 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது

காங்கிரஸ்  கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும் அவரின் மகனும் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தியும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குதாரர்களாக இருந்த வகையில் சுமார் 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது .

முன்னதாக சோனியா மற்றும் ராகுல் இருவரின் 2011-12 ஆண்டுக்கான வருமான வரி கணக்குகளை மறு ஆய்வு செய்வதை எதிர்த்து சோனியாவும் ராகுலும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு புதனன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சோனியா சார்பில் ஆஜரான காங்கிரஸ் மூத்த தலைவரான சிதம்பரம் வருமான வரித்துறை தவறான கணக்குகள் மூலம் சோனியிலா மற்றும் ராகுலுக்கு 141 கோடி ரூபாய் வரை வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பின்னர் இதுதொடர்பாக  ஒரு வாரத்துக்குள்  மூன்று தரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.   


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment