பொருளாதாரரீதியாக பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு

இந்தியாவில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஒதுக்கீடு பொதுப்பிரிவில் இருந்து அளிக்கப்படும் என்கிறது பி.டி.ஐ. செய்தி நிறுவனம். தற்போது நடைமுறையில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மேலாக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதற்காக அரசு நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதாவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யும் என்றும் கூறப்பட்டுகிறது.

மிக முக்கியமாக, இதுவரை இட ஒதுக்கீட்டின் பயன்களைப் பெறாத, பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகளுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், பொருளாதாரரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு இதுவரை இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. அதற்கு அரசமைப்புச் சட்டத்தில் வழி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment