மும்பையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அலுவலகத்தின் முன் வைத்தே கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் குமார் போயிர் (32). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக வீனா (35) என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடந்த சில நாட்களாகவே தம்பதியினர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் வீனா கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் மனைவி அலுவலகத்திற்கு வந்திருப்பதை அறிந்து கொண்ட குமார், அங்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 19 முறை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் வீனா மயங்கி விழுவதை பார்த்த சகஊழியர்கள் வேகமாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அதற்குள் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், கொலை வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தாலே கொலை செய்திருப்பது தெரியவந்தது
0 comments:
Post a Comment