இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ”வந்தா ராஜாவாத்தான் வருவேன்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு.
அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் அரசியல் படம் ”மாநாடு” படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து, இயக்குநரும். நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான சீமான் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு.
அரசியல் களத்தை மையமாக வைத்து எடுக்கத் திட்டமிட்டிருக்கும் புதிய திரைப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.
தற்போது வரை தீவிர அரசியலில் இருக்கும் இயக்குநர் சீமான், சமீப காலமாக சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். "தவம்" என்ற படத்தில் நடித்து வரும் அவர், அடுத்ததாக ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
அந்தப் படத்தில் தான் சிம்பு நடிக்கவிருக்கிறார். மருத்துவராக வேடம் ஏற்று நடிக்கும் சிம்புவின் அந்தப் புதிய படம் சமூக விஷயங்களை மையமாக அமைக்கப்பட்டிருக்கும் கதை என படக் குழு தெரிவிக்கின்றது.
0 comments:
Post a Comment