மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம் என்று விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டுகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து விநியோகிக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு - குடியகல்வு திணைக்களம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.
குறித்த திணைக்களம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுடன், இந்த மாதம் 31ஆம் திகதியுடன் கடவுச்சீட்டுகள் வழங்கும் நடவடிக்கை இரத்துச்செய்யப்படுமென்றும், குடிவரவு -குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டு பணிப்பாளர் எம்.என் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
முதலாம் திகதியிலிருந்து அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டுக்களே விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment