கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் ஐவர் காயமடைந்தனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தங்கல்ல, குடாவெல்ல மீன்பிடித்துறை முகப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் அறிவித்தலுக்கு அமைய சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொழுப்பு குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழு ஒன்று குடாவெல்ல பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment