ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் மகரகம வெத மாவத்தைப் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
திட்டிமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடமிருந்து, 10 கிராம் , 790 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
சந்தேகநபருக்கு கல்கிஸ்ஸ பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளதென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
திட்டிமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment