அதி சொகுசு பேருந்து ஒன்று நள்ளிரவு வேளையில் புத்தளத்திற்க்கு அருகில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
மன்னாரில் இருந்து நேற்று இரவு, கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளானது.
வீதியில் நின்ற யானை ஒன்றுடன் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டதாகத் தெரிய வருகின்றது.
இதன் போது விபத்திற்கு உள்ளான யானை உயிரிழந்ததோடு, பேருந்தில் பயணித்தவர்கள் பலருக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில், வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்டனர்.
பேருந்தும் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. விபத்துத் தொடர்பான மேலதிக விசரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment