ஹன்சிகா மோத்வானி சோலோ ஹீரோயினாக நடிக்கும் மகா படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.
முதல் கட்ட படப்பிடிப்பில் பெரும்பகுதி படம் பிடிக்கப்பட்டு விட்டது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.
ஜமீல் இயக்கும் இந்தப் படத்தை எக்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார்.
ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹன்சிகா காவி உடையில் தம் அடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கும் நிலையில்
அதைப் பற்றி கவலைப்படமல் படத்தை வேகமாக முடித்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment