சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விஸ்வாசம். அஜித்-நயன்தாரா, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு படம் வெளியாகவிருக்கும் இப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
வெளிநாடுகளிலும் பட வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இப்படம் ரஷ்யா மற்றும் உக்ரைனிலும் வெளியாகிறது.
இதன்மூலம் அஜித் படம் முதன்முதலாக இந்த நாடுகளில் கால் பதிக்கிறது. 2.0 படத்தை ரஷ்யாவில் வெளியிட்ட நிறுவனமே விஸ்வாஸம் படத்தையும் ரஷ்யா மற்றும் உக்ரைனில் வெளியீடு செய்கிறது.
இதற்கு முன்னர் ரஜினியின் காலா, 2.0, விஜய்யின் சர்கார் ஆகிய படங்கள் ரஷ்யாவில் வெளியாகின.
இந்தப் படங்கள் எல்லாம் ஒருசில தியேட்டர்களில் மட்டுமே வெளியான நிலையில், அஜித்தின் விஸ்வாசம், எட்டு தியேட்டர்களில் வெளியாவதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment