டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் கடந்த மாதம் புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகள் காற்று மாசு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக டெல்லி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அதிகளவில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் வீதியில் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இம்முறை காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது. டெல்லியில், நேற்று பதிவான காற்றின் தரக் குறியீடு 446 ஆக உள்ளது.
காற்று மாசு அளவு, இவ்வாறு அதிகளவு பதிவாவது, இந்தாண்டில் இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, காற்று மாசால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லி மக்களுக்கு, கடுங்குளிரும் பெரும் இன்னலை ஏற்படுத்தியிருக்கிறது.
0 comments:
Post a Comment