தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவராக, இயக்குநரும் மற்றும் நடிகருமான பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விஷால் தலைமையில் இயங்கி வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் பதவி விலகக் கோரியும், சங்கத்தில் முறைகேடுகள் பல நடந்திருப்பதாகவும் எதிர் அணியினர் குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில், எதிரணியினர் தியாகராய நகரில் இயங்கி வந்த தாயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர்.
இதையடுத்து அந்த பூட்டை உடைத்து விஷால் உள்ளே நுழைய முயன்றபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து விஷால் தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை திறக்குமாறு உத்தரவிட்டது.
இந்த நிலையில் நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூடியது.
இதன்போதே தலைவராக இருக்கும் கெளதம் மேனனுக்குப் பதிலாக பார்த்திபன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment