மட்டு.மாவட்டத்தில் காணி விடுவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 8.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு  மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படையினர் பயன்படுத்தி வந்த 8.5 ஏக்கர் காணி, ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய விடுவிக்கப்பட்டது.

இதுதொடர்பான ஆவணங்கள் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுர ஜெயசேகரவினால் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிடம் உத்தியோக பூர்வமாக நேற்றுக் கையளிக்கப்பட்டது. 

இதையடுத்து கையளிக்கப்பட்ட காணி ஆவணங்களைக் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரச அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்திடம் கையளித்தார்.

கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கபில அநுர ஜெயசேகர, மட்டக்களப்பு மாவட்ட இராணுவ பிரிகேடியர் கபில உதலுவவெல, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறீகாந், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர் உட்பட திணைக்கள தலைவர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள், சமயத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment