ஜோதிடம் பார்த்துக்கொண்டிருந்தவர் அனம் தெரியாத சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் குமரன் ரோடு பென்னி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்ற ஜோதிடரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று மதியம் அதே பகுதியில் இடம்பெற்றதாக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜோதிடம் பார்த்துக்கொண்டிருந்த ஜோதிரை அங்கு வந்த சிலர் அரிவாளால் தலை, தோள் உள்ளிட்ட பகுதிகளில் வெட்டினர்.
படுகாயம் அடைந்த ஜோதிடர் சத்தம்போட்டு குருதி வெள்ளத்தில் மயங்கினார்.
தகவல் கிடைத்து திருப்பூர் வடக்கு பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து ஜோதிடரை பார்த்தபோது அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டது தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியையும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0 comments:
Post a Comment