சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடித்த ரெண்டு படத்தில் தமிழுக்கு வந்தவர் அனுஷ்கா.
இப்போது மீண்டும் அதே மாதவனுடன் சைலன்ஸ் என்ற படத்தில் ஜோடி சேருகிறார்.
தெலுங்குப்பட எழுத்தாளர் கோனா வெங்கட் தயாரிக்கும் இந்த படத்தை ஹேமந்த் மதுகர் இயக்குகிறார்.
இந்த படம் குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வருகிற ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்திலும் அனுஷ்காவிற்கு சவாலான வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் அந்த கதாபாத்திரத்திற்காக தற்போது தன்னை முழுமையாக தயார்படுத்தி வருகிறார்.
இப்படத்தில் சில ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றுகிறார்களாம்.
0 comments:
Post a Comment