பிரபல நாடக மற்றும் இன்று அதிகாலை காலமானார்.
62 வயதான சீனுவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பயன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
கார்த்தி நடித்த வருஷம் 16, ரஜினியின் தளபதி படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்தவர் சீனு மோகன். அஞ்சலி, விசில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் சினிமா அவருக்கு செட்டாகவில்லை. இதனால் தான் ஏற்கனவே நடித்த நாடக துறையில் கவனம் செலுத்தினார்.
கிரேஸி மோகன், சீனுவுடன் இணைந்து ஏராளமான மேடை நாடகங்களில் பணியாற்றி உள்ளார். சின்னத்திரையிலும் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜின் இறைவி படத்தில் ரீ-என்ட்ரியானவர், தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஸ்கெட்ச், வடசென்னை, கோலமாவு கோகிலா, செக்கச்சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்தார்.
தொடர்ந்து, சினிமாவில் கவனம் செலுத்தி வந்த சீனுவின் திடீர் மரணம், திரையுலகை, குறிப்பாக மேடை நாடகங்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் இடையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
0 comments:
Post a Comment