சிறுவனின் கனவை நனவாக்கிய ஆஸி அணி

இதய நோயாளியான ஆஸ்திரேலிய 7 வயது சிறுவன் Archie Schiller இன் கனவு நத்தார் நாளில்  நனவாகியுள்ளது.

நத்தார் தினத்தில் ஆரம்பமான இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் Archie Schiller ஆஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக விளையாடிவருகிறார்.

எப்படியாவது அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்படுவது Archie Schiller இன் ஒரே கனவாக இருந்தது.

இது தொடர்பில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் அறிவிக்கப்பட்டபோது. அதற்கான வாய்ப்பை வழங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் முன்வந்தது.

இன்றைய போட்டியின் ஆரம்பத்தில், நாணயச் சுழற்சியின் போது Archie Schiller ஆஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக மைதானத்திற்கு வந்தார்.

என்றாலும் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற விராட் கோஹ்லி, இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட தெரிவுசெய்தார்.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஆஸ்திரேலிய அணித் தலைவர் Tim Paine : ” முதலில் துடுப்பெடுத்தாடுவதே எனது இணைத்தலைவரின் நோக்கமாகக் காணப்பட்டது. 

என்றாலும் மைதானத்தில் சில மாற்றங்களைக் காணக்கூடியதாக இருப்பதனால் முதலில் களத்தடுப்பு கிடைக்கப்பெற்றது எமக்குச் சாதகமாக அமையும் என கருதுகிறோம்” எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த Archie Schiller “Hit sixes and get wickets” எனத் தெரிவித்தார். 




Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment