குருதியில் எச்.ஐ.வி ; குருதி வங்கி ஊழியர் பதவிநீக்கம்

 கர்ப்பிணி பெண் ஒருவருக்கு  எச்.ஐ.வி. குருதி செலுத்திய விவகாரம் தொடர்பில் குறித்த இரத்த வங்கி ஊழியர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இந்தியாவின் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த  கூலித் தொழிலாளியின் மனைவி (வயது- 24 ) 2 ஆவது முறையாக கர்ப்பமான நிலையில் சாத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு இரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு இரத்தம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையிலுள்ள  குருதி வங்கியில் இருந்து குருதி தானமாக பெறப்பட்டு  கர்ப்பிணிப் பெண்ணுக்குச் செலுத்தப்பட்டது. 

இந்த நிலையில் குருதி ஏற்றிய நாளிலிருந்து அவர் சோர்வாகவே காணப்பட்டார். குடும்பத்தினரும் இதனைக் கண்டு கொள்ளவில்லை.

உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து அந்த பெண் அதே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு குருதிப் பரிசோதனை செய்யப்பட்டதில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் எச்.ஐ.வி. உறுதி செய்யப்பட்டது.

கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட  குருதியில் எச்.ஐ.வி. பாதிப்பு இருந்ததே இதற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.

விருதுநகர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன், துணை இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் சம்பந்தப்பட்ட குருதி வங்கிப் பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர்.

5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் இரத்த வங்கி ஊழியர் வளர்மதி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment