ஒரு காலத்தில் தொடர் வெற்றியை குவித்த இசை அமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ், கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுக்கு 2 அல்லது 3 படங்களுக்கு மட்டுமே இசை அமைத்தார்.
இந்த ஆண்டு அவர் இசை அமைத்த படங்கள் எதுவும் வெளிவரவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் இசை அமைப்பில் வெளிவரவிருக்கும் படம் தேவ்.
இது குறித்து ஹரிஸ் ஜெயராஜ் கூறியதாவது,
ஒரு சிறிய இடைவெளி ஏற்பட்டிருப்பது உண்மை தான். இதற்கு காரணம் இடையில் எனக்கு வந்த சில படங்கள் டிராப் ஆனது தான். குறிப்பாக கார்த்தி, விஷால் நடிப்பதாக இருந்த வெள்ளை ராஜா கருப்பு ராஜா படத்திற்கு பாடல்கள் அனைத்தையும் முடித்த விட்ட நிலையில் டிராப் ஆனது.
துருவ நட்சத்திரம் படம் தாமதம் ஆனது. இன்னும் சில படங்கள் ஆரம்ப நிலையிலேயே டிராப் ஆனது. இப்படி சில காரணங்களால் இந்த இடைவெளி ஏற்பட்டு விட்டது.
இப்போது தேவ் படத்தின் மூலம் எனது இசைப் பயணத்தை துரிதப்படுத்தியிருக்கிறேன். இதில் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. 15 பாடகர், பாடகிகள் பாடியிருக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு எனது இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார்.
பின்னணி இசைக்கு பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறேன். வாரணம் ஆயிரம் படத்திற்கு பிறகு நான் ரசித்து இசை அமைத்த படம் தேவ் என்றார்.
0 comments:
Post a Comment