கொழும்பு களியாட்ட விடுதிக்குச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள களியாட்ட விடுதியின் லிப்ட் உடைந்து விழுந்தத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த லிப்ட்டில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பத்தரமுல்ல, தலங்கம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான கோகில சமந்தபெரும எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொம்பனித் தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment