கிறிஸ்துமஸ் பார்டியில் கலந்துகொள்ள இந்தியா, தெலுங்கானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பார்டியில் நடந்த தீ விபத்தில் தெலுங்கானாவைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் கோலியர்வில்லி பகுதியில் உள்ள வீட்டில் கடந்த 24 ஆம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பார்ட்டி நடத்திருக்கிறது.
இதில் கலந்துகொள்ள இந்தியாவின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆரோன் நாயக் (17), ஷாரோன் நாயக் (14) மற்றும் ஜாய் நாயக் (15) ஆகியோர் சென்றுள்ளனர்.
ஒரு தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் காரி கோட்ரியெட் பெண் வீட்டில் இந்த பார்ட்டி நடத்துள்ளது. பார்ட்டிக்கு முன்பு வீட்டை அலங்கரிக்க பணியில் அனைவரும் மும்முரமாக இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், கோட்ரியெட் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவைச் சேர்ந்த சிறாரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு 11 மணி அளவில் ஏற்பட்ட மின்சார கசிவால் தீ பிடித்ததாகத் தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment