மகிந்தவின் மகனுக்குத் திருமணம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த சந்தன ராஜபக்ச, தனது காதலியான Tatyana வை எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்காலை, ரன்ன ஹோட்டலில் திருமண நிகழ்வு நடைபெறவுள்ளது.
வீரக்கெட்டிய கால்டன் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களை ஹோட்டலுக்கு அழைத்து செல்ல விசேட போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமண அழைப்பிதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித்த மற்றும் Tatyana ஆகியோர் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரோஹித்தவின் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததுடன், Christmas wedding என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment