பேஸ்புக் நிறுவனம் சொந்தமாக க்ரிப்டோகரென்சியை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் வாட்ஸ்அப் போன்ற செயலிகளில் பணப் பரிமாற்றம் செய்ய இந்த க்ரிப்டோகரென்சியை பயன்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அமெரிக்க டொலர் மதிப்பு ஏற்ற இறக்க சூழ்நிலை காரணமாக நிலையான மதிப்பு கொண்ட காயின்களை ஃபேஸ்புக் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
தற்சமயம் இந்த க்ரிப்டோகரென்சி உருவாக்குவதற்கான ஆயத்தப் பணிகள் மட்டுமே ஆரம்பித்திருப்பதால், இது வெளியாக இன்னும் சில காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு பேபால் நிறுவனத் தலைவர் டேவிட் மார்கஸ் ஃபேஸ்புக்கின் மெசஞ்சர் செயலியை நிர்வகிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார்.
பின்னர் மே மாதத்தில் மார்கஸ் ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் நடவடிக்கைகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டார். ஃபேஸ்புக்கின் பிளாக்செயின் குழுவில் தற்சமயம் வரை சுமார் 40 பேர் உள்ளனர்.
ஃபேஸ்புக்கின் க்ரிப்டோகரென்சி பற்றி இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. உண்மையில் ஃபேஸ்புக் க்ரிப்டோகரென்சியை உருவாக்கி வருகிறதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
உலகம் முழுக்க ஃபேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 250 கோடியாக இருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மட்டும் 4 ஆயிரம் கோடி டொலர்கள் ஆகும். ஃபேஸ்புக் நிறுவனம் சார்பில் க்ரிப்டோகரென்சி வெளியிடப்படும் பட்சத்தில், இவ்வாறு செய்யும் முதல் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கும்.
0 comments:
Post a Comment