தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் ஆகிய வெற்றி படங்களையடுத்து புதிய படத்தில் நடிக்கிறார் கார்த்தி. இது அவர் நடிக்கும் 18 ஆவது படம். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம் படத்தை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: கார்த்தி நடிப்பில் முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாகிறது. இதில் கதாநாயகி கிடையாது. அஞ்சாதே நரேன், ரமணா, ஜார்ஜ் மரியான் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 70 சதவீதம் ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் பிரத்யேக சண்டை காட்சிகள் அமைக்கிறார்கள். சாம் சி.எஸ் இசை. சத்யன்சூர்யன் ஒளிப்பதிவு. ஜோக்கர், காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, அருவி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு மற்றும் வண்டிச்சக்கரம், ரோஜாப்பூ ரவிக்கைக்காரி, விடிஞ்சா கல்யாணம் படங்களை தயாரித்த விவேகானந்தா பிக்சர்ஸ், திருப்பூர் விவேக் இணைந்து கார்த்தியின் 18 வது படத்தை தயாரிக்கின்றனர் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment