பிரபல ஹாங்காங் நடிகர் சொவ் யன் பேட். ஜாக்கி சானைப்போல ஆக்ஷன் ஹீரோ. ஆனால் அவர் அளவுக்கு உலக அளவில் வளரவில்லை.
ஆனாலும் கிழக்காசிய நாடுகளில் நம்பர் வண் நடிகராக இருக்கிறார். பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் உள்பட பல ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் தமிழ் இரசிகர்களுக்கும் அறிமுகம்தான். இவர் நடித்த கிளச்சி டைகர் ஹிட்டன் டிராகன் என்ற படம் தமிழில் பாயும்புலி பதுங்கம் நாகம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்து கலெக்ஷனை அள்ளியது.
உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். போர்ப்பஸ் பட்டியலில் 24 ஆவது இடத்தை பிடித்திருந்தார். பல கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் எளிமைக்கு பெயர் போனவர்.
இதனாலாலேய கிழக்காசிய மக்கள் இவரை கொண்டாடுகிறார்கள். விழாக்களுக்கு அழைத்தால் சொந்த செலவில் வந்து செல்வார். பேருந்து, முச்சக்கர வண்டியில் பொதுமக்களுடன் பயணிப்பார். ஏழை மக்களை அடிக்கடி சந்தித்து அவர்களுக்கு உதவுவார்.
இப்போது இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்த மாதிரி, தான் இறந்த பிறகு தன் பெயரில் உள்ள 5 ஆயிரம் கோடி சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு உயில் எழுதி வைத்து, அதனை வெளியிட்டார்.
இந்த முடிவுக்கு அவரின் மனைவியும் ஒப்புதல் அளித்திருக்கிறார். "இறந்த பின் என்னால் இந்தப் பணத்தை பயன்படுத்த முடியாது. அதனால் நான் இறந்ததும் இந்த சொத்துக்கள் மக்களை சென்று சேரட்டும்" என்று கூலாக சொல்கிறார் சொவ் யன்ஃபேட். ரியல் ஹீரோ.
0 comments:
Post a Comment