வெலிக்கடை சிறைச்சாலை கைதியொருவருக்கு மதுபானப் போத்தல்கள் வழங்கிய சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை மற்றும் சிறைச்சாலையை அண்மித்த ஏனைய எந்தவொரு மருத்துவ மத்திய நிலையத்துக்கோ செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
குறித்த மருத்துவர் தொடர்பில் சிறைச்சாலைகள் தலைமையகத்தில் இடம்பெறும் ஒழுக்காற்று விசாரணைகள் நிறைவடையும் வரை இவருக்கு வைத்தியசாலைக்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கும் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment