கேரக்டர் நடிகையாக சினேகா

முன்னணி கதாநாயகியாக  இருந்த சினேகா, 2012 இல் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து ஹரிதாஸ், உன் சமையல் அறையில் ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடித்தவர், சிவகார்த்திகேயன் நடிப்பில், மோகன்ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் கேரக்டர் நடிகையாக உருவெடுத்தார்.

தற்போது தமிழில் படங்கள் இல்லாதபோதும் தெலுங்கு, கன்னடத்தில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதில், தெலுங்கில் அவர் நடித்துள்ள வினய விதேய ராமா என்ற படத்தில் ராம் சரண் நாயகனாக நடித்துள்ளார். 

வரும்  ஜனவரி 11 ஆம் திகதி வெளியாகும் இப்படத்தின் புரொமோஷனுக்காக ஐதராபாத் சென்ற சினேகா, இந்த படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கீ ரோலில் தான் நடித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். 

இந்த படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாக்களில் கேரக்டர் நடிகையாக சினேகா ஒரு பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment