கிறிஸ்மஸூக்கு தயாராகும் முன்னர் குளிரையும், இருளையும் அகற்றும் ஐதீகத்துடன் மக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஜேர்மனியின் பாரம்பரியமான பெர்ச்சென்ட் அரக்கர்கள் முனிச்சிற்கு அருகில் உள்ள சிறிய பெவெரியன் நகரான கிர்ச்சீயோனில் ஊர்வலமாக சென்று நடனமாடி மக்களை மகிழ்விக்கின்றனர். ஆடல் பாடல்களுடன், சிறார்களை விளையாட்டாக பயமுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
பொதுவாக இந்த பாரம்பரிய நிகழ்வு குளிரையும், பனிக் கால இருளையும் அச்சுறுத்தி விரட்டும் தோரணையில் இடம்பெறுகின்றது.
பெர்சென்ட் ஊர்வலங்கள் பாரம்பரியமாக டிசம்பர் 21 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 6 ஆம் திகதி வரை மிகக் குறுகிய மற்றும் இருளான நாட்களில் இடம்பெறுவதுடன், மொன்ஸ்டர் மார்ச் என்ற நிகழ்வு பங்குனி மாதத்திலும் இடம்பெறுவது வழக்கம்.
இயற்கையை மீண்டும் வழமைக்கு திரும்பக் கோரும் பாடல்களும், பாரம்பரிய நடனங்களும் இதன்போதும் இடம்பெறுகின்றன.
பாரம்பரிய அரக்கர்களின் நடன நிகழ்வைக் கண்டு சில சிறார்கள் அச்சமடைந்த போதும், வேறு சிலர் அவர்களுடன் இணைந்து ஆர்வத்துடன் நடனமாடி வருகின்றனர்.
0 comments:
Post a Comment