தாய்லாந்தில் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அதிகம் இருக்கின்றனர். புத்த மத நம்பிக்கையின் படி ஒரு பெண்ணுக்கு இரண்டை குழந்தையாக ஒரு குழந்தை ஆணாகவும் ஒரு குழந்தை பெண்ணாகவும் பிறந்தால் அவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்து சேரமுடியாமல் போனவர்கள் எனவும் அடுத்த ஜென்மத்திலாவது சேரலாம் என ஒரு கருவில் ஒன்றாக சேர்ந்துள்ளனர் எனவும் அவர்கள் நம்புகின்றனர்.
அவ்வாறாக பிறக்கும் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது அவர்களது பழக்கமாக இருக்கிறது.
அதாவது ஒரு கருவில் உருவான அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். இதன் மூலம் அவர்களது பூர்வ ஜென்ம கடன் தீரும் எனவும் நம்புகின்றனர்.
இந்த நிலையில் தாய்லாந்தில் உள்ள பாங்காக் நகரை சேர்ந்த அமோரன்சேன் சன்ந்த்ரோன் - பஞ்சாரப்ரோன் தம்பதிக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தையாக ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அவர்கள் பிறக்கும் போதே இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இவர்களது பெற்றோர்கள் முடிவு செய்தனர். இவர்களது திருமணம் கடந்த திங்கட்கிழமை நடந்தது. திருமணம் முழுவதும் அந்நாட்டு வழக்கப்படியே நடந்தது.
இந்த திருமணத்துக்காக மணமகன் மணமகளுக்கு 2 லட்சம் பாத் அதாவது இந்திய மதிப்பில் ரூ 4.30 லட்சம் வரதட்சணையாகவும், மேலும் தங்கங்களும் வழங்கி திருமணம் செய்துள்ளார். இந்த விழாவில் இவர்களது உறவினர்கள் நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment