வீதிகளில் குப்பைகளை வீசுவதற்காக கழிவுகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகள் இனம்காணப்பட்டு சங்கத்தினாலும் தகுந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று முச்சக்கர வண்டிச் சங்கத்தின் தலைவர் இராமணி
விஜயராசா தெரிவித்தார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீடுகள், உணவகங்கள் , வர்த்தக நிலையங்களின் கழிவுகளை இரவு நேரங்களில் ஏற்றிச் சென்று மக்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் போட்டுவிட்டுச் செல்லும் செயல்பாடுகளுக்கு முச்சக்கர வண்டிகளின் உதவியை நாடும் சமயம் சஙகத்தின் பதிவில் உள்ள முச்சக்கர வண்டிகள் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம்.
அவ்வாறு ஈடுபடும் சந்தர்ப்பத்தில் தற்போது இரவுவேளைகளில் மாநகர சபையினால் திடீர் சோதனையில் அகப்பட்டாலோ அல்லது மறைகாணிகளில் அடையாளப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்குச் உட்பட்டாலோ சங்கம் பொறுப்புச் ஏற்க மாட்டாது.
அதேநேரம் இனம் காணப்படும் முச்சக்கர வண்டிகளின் பயண வழித்தட அனுமதிகள் குறிப்பிட்ட காலத்துக்கு இடை நிறுத்தப்படும். ஏனெனில் கடந்த இரு நாள்களாக யாழ்ப்பாண நகரில் இரவு நேரத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது பல முச்சக்கர வண்டிகளும் அகப்பட்டுள்ளமை தொடர்பில் எமது கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளனர்.
அது தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றோம் . எனவே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடும் ஒரு சில முச்சக்கர வண்டிச் சாரதிகளும் இச் செயலில் ஈடுபட வேண்டாம். எனக் கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.
0 comments:
Post a Comment