காணியைத் துப்பரவு செய்துகொண்டிருந்தவர்களை குளவிகள் விரட்டி விரட்டித் தாக்கிய சம்பவம் ஒன்று அளவெட்டி அம்பானையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
வெற்றுக் காணி ஒன்றை சிலர் துப்பரவு செய்தனர். காணியில் இருந்த பெரிய மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன.
ஓர் மரத்தில் இருந்த பெரிய குளவிக் கூட்டை தொழிலாளர்கள் அவதானிக்கவில்லை. இதனால் கூடு கலைந்துள்ளது.
துப்பரவு செய்தவர்கள் வீதியால் பயணித்தவர்கள் என 14 பேரை குளவிகள் விரட்டி விரட்டிக்
கொட்டியுள்ளது.
குளவிக் கொட்டுக்கு இலக்கான 14 பேரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் சிகிச்சை பெற்று வெளியேறிய நிலையில், ஏனைய 10 பேரும் தொடர்ந்தும் விடுதியில் தங்கிச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 comments:
Post a Comment