மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது நடிகர் ரஜினியின் பேட்ட திரைப்படம். இந்தப் படத்துக்கான பட்ஸ்ட் லுக் போஸ்டரில் துவங்கி எல்லாமே, அதிரடியாக நடந்து வருகிறது.
மிகுந்த எதிபார்ப்பைப் கிளப்பி, எல்லாவற்றையும் செய்கின்றனர். இந்நிலையில், பெட்ட படத்தின் டிரைலர் தற்போது வெளியாக பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. இந்த டிரைலரை, பல்லாயிரக்கணக்கானோர், வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
படத்துக்கு எப்படி விமர்சனம் வெளியிடப்படுமோ, அதே போல, டிரைலரை பார்த்து விட்டு பலரும் விமர்சித்துள்ளனர்.
பேட்ட பட டிரைலரைப் பார்த்து விட்டு, இயக்குநர் கவுதம் வாசுதே மேனன் வெளியிட்ட கருத்து: பேட்ட திரைப்பட டிரைலர் மிகப் பிரமாண்டமாக உள்ளது.
ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும், இயற்கையாகவும் அதே நேரம் ஸ்டைலாகவும் உள்ளது. டிரைலரைப் பார்க்கும்போதே, முழு படத்தையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கருத்து கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment