நாயகனாகிறார் யோகி பாபு

சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு,  தற்போது  நகைச்சுவை  நடிகரானார். இன்றைக்கு அவர் நடிக்காத படங்களே இல்லை என்கிற அளவிற்கு  வந்த விட்டார்.

கூர்கா, ஜோம்பி, தர்மபிரபு ஆகிய 3 படங்களில்  நாயகனாக நடிக்கிறார் யோகி பாபு.  இந்த நிலையில் யோகி பாபுவின் அடுத்த அவதாரம் வசனகர்த்தா.

பொதுவாக யோகி பாபு நடிக்கும் படங்களில் அனைவரையும் சிரிக்க வைக்கும் டைமிங் டயலாக்கும் யோகி பாபு, சொந்தமாக பேசியதைவதான். அதைக் கவனித்த தர்மபிரபு படத்தின் இயக்குனர் முத்துக்குமரன், படத்தில் அவரது  வசனங்கள் முழுவதையும் அவரையே எழுதச் சொல்லிவிட்டார்.

கதைப்படி, எமனின் மகன் யோகிபாபு, எமனுக்கு அடுத்த பதவியில் இருக்கிறவர் ரமேஷ் திலக். ஒரு நாள் எமன் இறந்துவிட, அடுத்த எம பதவிக்கு சட்டப்படி ரமேஷ் திலக் வர வேண்டும். ஆனால் வாரிசு அடிப்படையில் யோகிபாபு வரவேண்டும். 

எம பதவியை பிடிக்க இவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தான் படத்தின் கதை. தற்போதைய அரசியல், சினிமா இரண்டையும் கலந்துகட்டி நையாண்டி செய்கிற மாதிரி வசனத்தை எழுதியிருக்கிறாராம் யோகிபாபு.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment