விஜய்- சமந்தா மற்றும் காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்க 2017 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த படம் மெர்சல்.
அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் விவேக் எழுதிய அப் படத்தின் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
குறிப்பாக ஆளப் போறான் தமிழன் பாடல் இதுவரை வெளிவந்த விஜய் படங்களிலேயே சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல் என விஜய் இரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
மெர்சல் படப் பாடல்களை இப்போதும் ரசிகர்கள் யுடியூபில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அந்தப் பாடல்களின் பார்வைகளே சாட்சி.
மெர்சல் படத்தின் மொத்தப் பாடல்களும் 30 கோடி பார்வைகளைத் தற்போது கடந்திருக்கின்றன. ஆளப் போறான் தமிழன் பாடலின் வீடியோ 8 கோடியே 81 இலட்சத்தையும், லிரிக் வீடியோ, 4 கோடியே 36 லட்சத்தையும் கடந்துள்ளன.
மற்றைய பாடல்களில், வீடியோ மற்றும் லிரிக் இரண்டையும் சேர்த்து மாச்சோ, பாடல் 6 கோடி, மெர்சல் அரசன் பாடல் 4 கோடியே 90 இலட்சம், நீதானே பாடல் 5 கோடியே 60 லட்சம் பார்வைகளையும் கடந்து மொத்தமாக 30 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளன.
வேறு எந்தப் படத்தின் பாடல்களும் இந்த அளவிற்கு யு டியுபில் வரவேற்பைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment