ஐஸ் என்ற போதைப்பொருளை விநியோகிக்க எடுத்து சென்று கொண்டிருந்த சந்தேகநபர் ஒருவர் யாழ். மாதகல் பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் எட்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 85 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மாதகல் பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment